- பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
- நீதிபதிகள் தங்கள் மனசாட்சி, ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணம் மற்றும் சட்டத்துக்கு உண்மையாக பணியாற்ற வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
- ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!,” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
- ட்ரினிடாட் மற்றும் டொபாகோ பயணத்தில் மீண்டும் ஒருமுறை தனது தமிழ்ப் பற்றை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சிலும் இந்திய அணியின் கேப்டன் சதம் அடித்தார். இதன்மூலம், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- இஸ்ரேலுடன் போரை நிறுத்துவது தொடர்பான திட்டத்துக்கு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளோம்,” என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
- ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனில் மக்களைக் கொல்ல விரும்புகிறார். இது நல்லதல்ல’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் 06-07-2025
