- த.வெ.க., முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
- கோவை உள்ளூர் திட்டப்பகுதியின் இரண்டாவது மாஸ்டர் பிளானை, தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 04) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
- ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்தனர்.
- தனிநபர்கள், சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடனின் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால், கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. புளோட்டிங் ரேட் எனப்படும் மாறும் வட்டி முறையில் பெறப்படும் கடனுக்கு இந்த சலுகை பொருந்தும்.
- ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பருவமழைக்கு 63 பேர் பலியான நிலையில், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
- பல்வேறு நிதி முறைகேட்டு வழக்கில் தேடப்படும் பிரபல தொழில் அதிபர்கள் லண்டனில் ஒரு விழாவில் பங்கேற்று பார்ட்டி கொண்டாடிய படங்கள் , வீடியோ வைரலாகி பரவி வருகிறது.
- தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது, என்று துணை ராணுவ தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் இருந்து, 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகிறது. ஜூலை 15ம் தேதி இந்தியா வந்தடையும், என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தி உள்ளார்.