- அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.
- இந்திய ஆயுதப்படைகளுக்கு கலாஷ்நிகோவ் வகையின் அதிநவீன ஏகே 203 ரைபிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ரைபிள்கள் மூலம் ஒரு நிமிடத்தில் 700 சுற்றுகள் சுட முடிவதுடன், 800 மீ., தூரம் வரை தோட்டாக்கள் பாயும்.
- கூவி, கூவி மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமல தெரிவித்தார்.
- இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காகவே கூட்டணி வைத்தததாகவும், தற்போது விலகுவதாகவும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பு தெரிவித்துள்ளது.
- கோவை ஆர்.எஸ்.புரத்தில் 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார்.
- ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
- ரஷ்யா-இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. மூன்று நாடுகளுக்கு இடையிலான இந்த நட்புறவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
- பிரிட்டனில், 2029 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்னதாக ஓட்டளிப்பதற்கான வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 July 2025 | Retro tamil
