- சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது. தொடர்ந்து, சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.
- விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- காவலர் பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பு குறைப்பு, எல்லா காவலர்களுக்கும் பொருந்தாது’ என அறிவிக்கப்பட்டதால், 45,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
- டில்லியில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஜெட் விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் விமானி அறைக்குள் பயணிகள் இருவர் நுழைய முயற்சித்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
- ஆக்சியம்-4 விண்வெளிப் பயணத்தின் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதை அடுத்து, இறைவனுக்கு நன்றி என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
- ”வி.சிக ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும்” என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- ”பா.ஜ., என்று ஒன்று இல்லை என்றால் தி.மு.க., என்ற கட்சி அழிந்து, 20 வருடங்கள் ஆகி இருக்கும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
- அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”காத்திருப்போம்…காத்திருப்போம்…காலங்கள் வந்துவிடும்” என பாட்டு பாடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
- பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87, பெங்களூரில் நேற்று(ஜூலை 14) காலமானார். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் 15-07-2025
