- ”நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 அதுமாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது” என தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
- தென்காசியை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்ததாக தாய் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
- கேப்டன் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதிக்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை பரிதவிப்புடன் காத்திருக்கிறது.
- ” கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள், தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும், ” என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.
- நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- ”கள் மது என்றால் மது ஆகிவிடுமா, இன்னும் உங்கள் ஆட்சியும் 500 ஆண்டுகள் இருந்திட போகிறதா? சரியாக இன்னும் 6 மாதம் தான்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
- ”தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியல் 20 ஆவணப் படுகொலைகள் நடந்துள்ளன” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
- ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.,) கண்டறிந்துள்ளது.
- பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யாவின் துாரக்கிழக்கு பகுதியிலும், அமெரிக்காவின் ஹவாய் தீவிலும், ஜப்பானிய தீவுகளிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வருவதாக, ஹவாய் தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.