- தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் வளர்ச்சி பெற்றுள்ளதாக தி.மு.க., அரசு கூறுகிறது. அப்படி இருக்கையில், முதல்வர் ஏன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
- ”கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் உலகில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. 2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்,” என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசினார்.
- ”கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல. அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- மணல் கொள்ளைக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுதல், நீர்நிலைகளை இணைத்து கொள்ளளவை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், காவிரி வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
- காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
- பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை மூலம் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது என்று லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
- ”பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறைய விளக்கம் கொடுத்தார். ஆனால் பயங்கரவாதிகள், பஹல்காமில் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை அவர் சொல்லவில்லை,” என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
- பல நாட்கள் நீடித்த எல்லை மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து, கம்போடியா உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
- ஜார்ஜியாவில் நடந்த உலகக் கோப்பை செஸ் பைனலில், சக நாட்டு வீராங்கனையான ஹம்பியை வீழ்த்தி இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.