- முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வற்கு இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திருமணத்தை மீறிய உறவுக்காக 2 குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில், தாய் அபிராமி மற்றும் காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- முருக பக்தர்கள் மாநாட் டின் வெற்றியை தொடர்ந்து, முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, காவடி யாத்திரை நடத்த, ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்து அமைப்புகள் தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
- ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர்.
- டில்லி மற்றும் மும்பையில் உள்ள தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகாவில் ஒரு இடத்தில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்ததற்கான உறுதியான, 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார்.
- தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
- இனி இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
- தேர்தலில் போட்டியிடுவோர், இனி ஊரைக்கூட்டி ஊர்வலம் சென்று மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 24 July 2025 | Retro tamil
