- முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் பாஜ பி டீம் என கூறுகின்றனர், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 23, 2025) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு வழங்கி கவுரவிக்கிறார்.
- அமெரிக்காவின் இரு முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இந்தியர்கள் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
- தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
- ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரி முதல் நாளான நேற்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரம் கார்கள் டெலிவரி வழங்கியுள்ளது. அதேபோல் முதல் நாளில் 30 ஆயிரம் கார்கள் விற்பனை ஆனதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைத்து இருக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- சபரிமலையில், தமிழகத்திற்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். அதற்கு பதிலாக, பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உள்ளோம், என, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.















