- ”இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான். இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
- மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு செய்வதாக நாகையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவரும், நடிகருமான விஜய் குற்றம் சாட்டினார்.
- நீலகிரி, தேனி உட்பட 8 மாவட்டங்களில் இன்று (செப் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 தமிழக அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. அதன் முழு பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
- ”எதுவாக இருந்தாலும் கூகுள், ஏஐ.,யிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிட கூடாது. தொழில்நுட்பத்திற்கு, மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்த வேண்டும்” என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இன்று (செப் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஹெச் 1பி விசாவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அதிபர் டிரம்ப் உத்தரவு, தாயகம் வந்துள்ள இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
- உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 SEP 2025 | Retro tamil
