- சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும், சாக்குபோக்கு சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கூட்டணி கட்சிகளுக்குள் திருமாவளவன் சிக்கி தவிக்கிறார்” என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
- தூய்மைப் பணியை தனியாருக்குத் தர தடை இல்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- திமுக இளைஞரணியில், ஐந்து லட்சம் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஹிந்தி புகுந்து விடும். அதனால், 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் இலக்கை நிறைவேற்ற வேண்டும், என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
- 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
- ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார், மேற்குவங்கத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு பிறகு சில வாரங்கள் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை மீண்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
- பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 August 2025 | Retro tamil
