- ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி மற்றும் தொழிலதிபர் கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்து நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவை விசாரிக்க மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த அந்நாட்டின் பிரதமர் சுசீலா கார்கியின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும், என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
- தமிழகத்தில் இன்று (செப் 18) 21 மாவட்டங்களிலும்ல நாளை (செப் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- நாட்டின் வாக்காளர்களை ராகுல் அவமதித்து விட்டார். மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள், என்று பாஜ தெரிவித்துள்ளது.
- இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். என இஸ்ரோ தலைவர் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- ஓட்டு திருட்டு என்ற பெயரில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- டில்லியில் அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்த போது முகத்தை தான் துடைத்தேன். அதை திரித்து தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கின்றனர், என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
- ஓட்டு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் முதலில் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
- தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.