- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
- மதுரையில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்களை அமைத்து, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் ரூ.1360 குறைந்துள்ளது.
- சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் இன்று முதல், ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
- அமெரிக்க அதிபர் டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு வரும் திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் கூறி உள்ளார்.