- உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 12வது இடத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு முன்னேற்றம் கண்டுள்ளது.
- எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவது போல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீசார் செயல்படுகின்றனர் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
- சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பெயரை உச்சரிக்காமல் கரூர் சம்பவம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார்.
- கரூர் சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.
- அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
- பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ. நேற்றுமுன்தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது’ என, அமைச்சர் ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பாக்ஸ் கான் தரப்பில், ‘புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது.
- ஆட்சியில் பங்கு, கரூர் சம்பவம் விவகாரம் தொ-டர்பாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமியின் ஆதரவாளர்களும், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களும், சமூக வலைதளைங்களில் மோதிக் கொண்டது, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில், சலசலப்பை உருவாக்கி உள்ளது.
- அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்க தாக்கலான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
- மஹாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியால் 500 பள்ளி மாணவர்கள் வாகனங்களிலேயே 12 மணிநேரம் காத்திருந்தனர்.