- கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (அக் 14) முதல் அக்டோபர் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
- ‘ஸ்ரீசன் பார்மா’ இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தங்கம், வெள்ளி விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.92,200 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது.
- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குழம்பி போய் இருக்கிறார், என, மதுரை விமான நிலையத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
- இறந்தோரை வைத்து, அற்ப அரசியல் செய்கிறது த.வெ.க., என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
- டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவரது 40 ஆண்டு அரசியல் வரலாற்றை கோர்ட் மூலம் மக்கள் முன் வைக்க உள்ளோம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அவர்கள், செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இரண்டு கட்டங்களாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
- இந்தியா-கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது, கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- அமெரிக்கா சீனாவிற்கு உதவ விரும்புகிறது, அதற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என 100% வரி விதித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 13 Octo 2025 | Retro tamil
