- திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு, என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களை, உடனடியாக இடமாறுதல் செய்ய, பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
- மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குறித்து, அவதுாறு கருத்து தெரிவிக்க, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
- துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியா சுலப வெற்றி பெறலாம்.
- நேபாளத்தில் சிக்கிக் கொண்ட தங்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று இந்திய பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
- போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என மாணவர்களுக்கு நேபாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி(எஸ்ஐஆர்) மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டில் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை (செப்.,11) செல்கிறார்.