- அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
- இந்தியாவையும், ரஷ்யாவையும், மோசமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம், அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி உள்ளார்.
- ஆக்ஸ்போர்டில் உள்ள ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- 160 பயணிகளுடன் டில்லியில் இருந்து இந்தூர் நோக்கி சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமானி எச்சரித்ததை தொடர்ந்து இந்தூரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
- அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
- மஹாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
- ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் டாப் 10 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. பட்டியலில் ஆந்திரா, கர்நாடகா மாநில அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 06 SEP 2025 | Retro tamil
