- உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தாராலி அருகே சுகி டாப் என்ற இடத்திலும் மேகவெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உலகின் தெற்கு பகுதிகள் , பிரிக்ஸ் அமைப்பு கூட்டாளிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர், என ரஷ்யா தெரிவித்துள்ளது.
- ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் வாங்க இந்திய விமானப்படையும், கடற்படையும் தீவிரம் காட்டி வருகின்றன.
- தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று (ஆகஸ்ட் 5), ‘பாஜவின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை’ என தெரிவித்தார்.
- நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு, இன்று (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
- டெல்டாவின் கடைமடைப்பகுதிகளில் நீர் முழுமையாக வராததால், குறுவைப் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழ் கட்சியினர் கைது செய்யபட்டனர்.
- அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா,” என விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என தேசிய ஜனநாயக கூட்டணி பார்லி., குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை கடுமையாக சாடினார்.