- அனுமதிக்கப்பட்ட இடத்தில் நின்று பேசியதை தவிர நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்க வருகிறேன், என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் பாஜ எம்பி ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் நேரடி விசாரணை நடத்தினர். அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான அதி முக்கியத்துவம் வாய்ந்த கோரமான சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை அறிக்கையால் எந்தவித பயனும் ஏற்படாது என்பதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
- விஜய் பிரசாரத்துக்கு பெரிய இடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது, என கரூரில் தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு நிருபர்கள் சந்திப்பில் ஹேமமாலினி தெரிவித்தார்.
- நடிகர் விஜய்யை காண 10, 000 பேர் தான் வருவார்கள் எப்படி கணித்தீர்கள் என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது.
- கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ், பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
- சென்னையில் இன்று (செப் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.86,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,860க்கு விற்பனை ஆகிறது.
- மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு நாளை டில்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 30 SEP 2025 | Retro tamil
