- அதிக பணிச்சுமை கொடுக்க விரும்பிய அணி முடிவுக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணி வலுக்கட்டாயமாக நீக்கியது” என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்தார்.
- அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேஜ கூட்டணியில் தான் தொடர்ந்து இருக்கிறார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான். என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
- பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் நெருக்கம் காட்டி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்து விடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரஷ்யா, சீனா தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், ‘இந்தியா – அமெரிக்கா மக்களின் நலன்களுக்காக, இருநாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்வோம்’ என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
- அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக நினைப்பதை காட்டுவதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஏமனில் ஐநா அலுவலகத்தில் சோதனை நடத்திய ஈரான் ஆதரவு ஹவுதி பயங்கரவாதிகள், அங்கு பணியில் இருந்த 11 ஊழியர்களை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்., 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
- தமிழக பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமனை நியமித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 SEPTEMBER 2025 | Retro tamil
