தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள்கள் மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தநிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவற்றின் வெளியே A4 பேப்பரில் தகவல் ஒட்டப்பட்டிருந்தது தொடர்பாக புகாரும், சர்ச்சையும் எழுந்தது.
இதற்கு பதிலளித்த TNPSC தலைவர் பிரபாகர், “வினாத்தாள் கசியவில்லை. தேர்வர்கள் எந்தவித அச்சத்திற்கும் உள்ளாக வேண்டியதில்லை” என உறுதியுடன் தெரிவித்துள்ளார். மேலும், வினாத்தாள்களை தனியார் பேருந்துகள் மூலம் அனுப்பியதற்கான விவரங்களை தற்போது கேட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தேர்வு முறையில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும், தேர்வு நியம விதிகளின் அடிப்படையில் நடைபெறும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.
















