திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் புக்கிங்கை ஒவ்வொரு மாதமும் 18ம் தேதி திறக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. ஆனால் அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட் வெளியீட்டில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் புக்கிங் ஜூலை 18ம் தேதி பதிலாக ஜூலை 19ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத டிக்கெட் வெளியீட்டு விவரம் :
ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட் – ஜூலை 19 காலை 10 மணி
எலக்ட்ரானிக் லக்கி டிப் – ஜூலை 21 காலை 10 மணி
தேர்வு ஆனவர்கள் ஜூலை 21 முதல் 23ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்
விசேஷ சேவைகள் (கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், சகஸ்ரதீப அலங்காரம் உள்ளிட்டவை) – ஜூலை 22 காலை 10 மணி
விர்ச்சுவல் சேவைகள் – ஜூலை 22 பகல் 3 மணி
அங்கப்பிரதட்சணம் டோக்கன் – ஜூலை 23 காலை 10 மணி
ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட் – ஜூலை 23 காலை 11 மணி
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிக்கெட் – ஜூலை 23 பகல் 3 மணி
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் – ஜூலை 23 காலை 10 மணி
அறைகள் முன்பதிவு (திருப்பதி/திருமலை) – ஜூலை 24 பகல் 3 மணி
முக்கிய குறிப்புகள் :
தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறை முன்பதிவுகள் ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே செய்ய வேண்டும்.
புரட்டாசி மாதம் : செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை.
முக்கிய நாள்கள் :
அக்டோபர் 2 – புரட்டாசி பிரம்மோற்சவ நிறைவு
அக்டோபர் 4 மற்றும் 11 – புரட்டாசி சனிக்கிழமைகள்
அக்டோபர் 6 – பௌர்ணமி கருட சேவை
இந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. எனவே, தரிசன திட்டங்களை முன்னதாகவே செய்து கொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.