தூத்துக்குடி :
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ கூட்டணியில் இருந்து விலகியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
“இந்த திமுக அரசு கேள்வி கேட்பவர்களையும், போராடுபவர்களையும் நசுக்குகிற அரசாக உள்ளது. மாநிலம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் ஆளும் தரப்பினரின் செயல்பாடுகளால் நடந்துகொண்டே இருக்கின்றன,” என்றார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்த அவர்,
“செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனை சந்தித்தாரா என்பதைப் பற்றிய தகவல் எனக்கு இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடுத்த முடிவின்படி அவர் நீக்கப்பட்டுள்ளார். எங்களைப் பொறுத்தவரை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாகச் சந்திக்க இயலாது. நான் 11ஆம் தேதி டில்லி செல்லவிருக்கிறேன். செங்கோட்டையன் எங்கு உள்ளார் என தெரியவில்லை,” என்றார்.
மேலும் அவர்,
“முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தைப் பற்றிய வெள்ளை அறிக்கை ஏற்கனவே கேட்டிருந்தோம். ஆனால் அவர் பதிவுகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.
பாஜ கூட்டணியில் இருந்து விலகியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தேவைப்பட்டால் அவர்களை நேரில் சென்று சந்திக்கத் தயாராக உள்ளேன். அவர்கள் அழைத்தால் போய் பேசுவேன். தேவையான சூழலில் நானே சென்று அழைப்புக் கொடுப்பேன்,” என்று தெரிவித்தார்.
