ஜெருசலேம் : “பாலஸ்தீன நாடு இனி இருக்காது. இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததால் சர்வதேச அளவில் கடும் பரபரப்பு எழுந்துள்ளது.
காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நெதன்யாகு, “பாலஸ்தீன நாடு இனி உருவாகாது. அது எங்கள் நிலம். இதுதொடர்பான எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறோம். எங்கள் பாரம்பரியம், நிலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேச்சு உலகளவில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், “பாலஸ்தீனர்களின் சுயாட்சி உரிமையை மறுக்கும் வகையில் வெளிப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதமரின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறோம்” என தெரிவித்தார்.