“ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் ராணுவ வலிமையை உலகம் அறிந்தது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் இன்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் பேசினார்.
அவர் கூறியதாவது:
“ஆரோக்கியமான, சுமுகமான விவாதங்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூரின் மூலம், இந்திய பாதுகாப்புப் படைகளின் திறமையை உலகம் பாராட்டியுள்ளது. 22 நிமிடங்களில் பயங்கரவாத முகாம்களை அழித்து, 100 சதவீத இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.”
புதிய தொடக்கங்களுக்கு நேரம்
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை தெரிவித்து, :
“மழைக்காலம் என்பது புதிய தொடக்கங்களுக்கான நேரம். இந்த ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியக் கொடி பறக்கிறது. இது, இந்தியாவின் வெற்றிக்குரிய மற்றும் பெருமைக்குரிய தருணம்.”