“எனக்கிருந்த ஒரே கனவு இன்று நிறைவேறியது” – பெரியார் விருது பெற்ற கனிமொழி எம்.பி.

கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், இந்த ஆண்டிற்கான பெரியார் விருது திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

திமுக தொடக்க நாள், பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்த நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 முதல் 17 வரை திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதன் பகுதியாக இன்று நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

அதில், பெரியார் விருது கனிமொழிக்கு, அண்ணா விருது பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப. சீத்தாரமனுக்கு, கலைஞர் விருது முன்னாள் எம்.எல்.ஏ. சோ.மா. ராமச்சந்திரனுக்கு, பாவேந்தர் விருது குளித்தலை சிவராமனுக்கு, பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராலிங்கத்துக்கு, மு.க. ஸ்டாலின் விருது முன்னாள் அமைச்சர் நா. பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது. கூடுதலாக, இவ்வாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முரசொலி செல்வம் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற பிறகு உரையாற்றிய கனிமொழி, “எனக்கு இருந்த ஒரே கனவு, தலைவர் கலைஞர் பெற்ற பெரியார் விருதை ஒருநாள் நான் பெற வேண்டும் என்பதுதான். இன்று அது நிறைவேறியது. இந்த பெருமையை அளித்த திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த நன்றி,” என்று தெரிவித்தார்.

Exit mobile version