ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஓமன் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி, இந்த முறை டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பையில், இந்த முறை ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ஆம் தேதி பாகிஸ்தானையும், 19-ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்ள உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர்களில் இந்திய அணி 8 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை 6 முறை, பாகிஸ்தான் 2 முறை வெற்றி பெற்றுள்ளன.
சமீபத்தில் இந்திய அணியுடன், ஆப்கானிஸ்தான் தனது 17 பேர் கொண்ட அணியையும் அறிவித்தது. இதையடுத்து சர்வதேச அரங்கில் அதிக அனுபவம் இல்லாத அணியான ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.