தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், வாக்கு சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் 68 ஆயிரத்து 467 வாக்கு சாவடிகள் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதியில் புதிதாக வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 6 ஆயிரத்து 568 வாக்கு சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்து 509 வாக்கு சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு சாவடிகள் இடமாற்றம், பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Exit mobile version