கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 93 பேரும், தமிழகத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில், மும்பையில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version