ரோம்: உலகில் பல நாடுகள் மர்மங்கள், தனிச்சிறப்புகள் கொண்டுள்ளன. அதில் மிகவும் வித்தியாசமான உண்மை ஒன்றை தன்னுள் கொண்டுள்ளது வாடிகன் நகரம். 1929 பிப்ரவரி 11ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த நாடு, இன்று வரை 96 ஆண்டுகளாக இருந்தும் ஒரு குழந்தையும் இங்கு பிறக்காதது ஆச்சரியமாகும்.
உலகின் மிகச் சிறிய நாடான (0.44 சதுர கி.மீ.) வாடிகன் நகரம், கத்தோலிக்க மதத்தின் தலைமைத் தளம். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் அனைத்து பெரிய மதத் தலைவர்களும் இங்கு தங்கி செயற்படுகின்றனர். போப் தலைமையில் புனித அரசாங்கம் இயங்குகிறது.

குழந்தை பிறக்காததற்கான காரணம்
வாடிகனில் மருத்துவமனை அல்லது பிரசவ வசதிகள் எதுவும் இல்லை. யாராவது கர்ப்பமாக இருந்தால் அல்லது தீவிர சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை அருகிலுள்ள ரோம் நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுவார்கள். பிரசவ அறை இல்லாததால், இங்கு இயற்கையான குழந்தைப் பிறப்பு நடைபெறுவதில்லை.
மேலும், வாடிகனில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை. பதவிக்காலத்திற்கு ஏற்ப தற்காலிக குடியுரிமை மட்டுமே வழங்கப்படும். இதனால், குழந்தை பிறப்பின் மூலம் குடியுரிமை பெறும் வாய்ப்பும் இல்லை.

வாடிகனில் தற்போது சுமார் 800–900 பேர் மட்டுமே வசிக்கின்றனர்; பெரும்பாலும் மதத் தலைவர்களும் பணியாளர்களும்.
சிறை இல்லாத ஒரே நாடு வாடிகனே. குற்றவாளிகள் இத்தாலிய சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.
உலகளவில் அதிகப்படியான மது அருந்துபவர்கள் வாடிகனில் தான்; ஒருவருக்கு வருடத்திற்கு சராசரியாக 74 லிட்டர் மது.
சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் பிக்பாக்கெட், திருட்டு போன்ற குற்றங்கள் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகச் சிறிய ரயில் நிலையம் (சிட்டா வாடிகானோ) இங்குதான் உள்ளது; ஆனால் இது பொருட்களை கொண்டு செல்ல மட்டும் பயன்படுத்தப்படுகிறது.