திராவிடம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
“அதிகாரமும், 40 பார்லிமென்ட் உறுப்பினர்களும் கையில் இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மீனவர்கள் பிரச்சனை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறாராம். காவேரி நீர் பிரச்சனைக்காக ஒரு பெரிய பேரணி நடத்தி தீர்வு காணலாமே? ஆனால் அதற்குப் பதிலாக ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ போரை ஆதரிக்கப் பேரணி நடத்துகிறார்,” என்றார்.
“முதலில் திராவிடம் என்றால் என்ன என்று ஸ்டாலின் சொல்லட்டும். ‘திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அரசியல்’ என்பதே உண்மை. இதனை மறுப்பவர் யார்? எதிர்ப்பவர் யார்? மக்கள் அரசியல் தெளிவு பெறாத வரை திராவிடக் கதைகளே தொடரும்,” என சீமான் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “இளம் தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். விரைவில் தமிழகத்தில் புதிய அரசியல் சிந்தனை எழும்,” என்றும் அவர் கூறினார்.
