“பஞ்சாங்கமே எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருமென சொல்கிறது!” – நயினார் நாகேந்திரன்

சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பஞ்சாங்கத்திலும் கூட எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என புதிய சர்ச்சைக்கு இடமாகியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

“முன்னாள் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, தற்போது குற்றங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறை 60% உயர்ந்துள்ளது. போதைப்பொருள் பரவலும் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியை மக்கள் விரும்பாமல் வருத்தத்துடன் பார்க்கின்றனர்,” என்றார்.

அதே சமயம், தாம் பார்த்த ஒரு பஞ்சாங்கத்தில், “ஆளும் கட்சிக்கு சிரமங்கள் அதிகம், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு” என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version