“மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ்…” – ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம் !

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேட்டரிங் துறையில் பெயர் பெற்ற இவர், ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணமாகி இரு குழந்தைகள் கொண்ட இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குற்றச்சாட்டால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “2023-ஆம் ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜுடன் நான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது அந்த உறவிலிருந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மகளிர் ஆணைய விசாரணையின்போது ரங்கராஜ் தானே ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.

அவரது புகாரின் பேரில் மகளிர் ஆணையமும் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இதே வேளையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து, “ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார். குழந்தை தொடர்பான உண்மையை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த (DNA Test) நான் தயார். அந்த குழந்தை உண்மையிலேயே எனது மகனாக நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு எதிராக ஜாய் கிரிசில்டா, “அவர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுக்கிறார். உரிமைக்காக போராடும் பெண்ணையும், தனது குழந்தையையும் கொச்சைப்படுத்துகிறார். நான் எந்த மிரட்டலையும் செய்யவில்லை. என் இன்ஸ்டா பக்கத்தில் 15 வீடியோக்கள் இருக்கின்ற, அவற்றில் எல்லாமே அவர் சிரித்த முகத்துடன் தோன்றுகிறார். அப்படியிருக்கும்போது எப்படி மிரட்டி திருமணம் செய்தேன் என கூற முடியும்?” என எதிர்வினை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், “அவர் எனக்காக இதுவரை எந்தச் செலவையும் செய்ததில்லை. என் கார்கள் இரண்டு அவரே விற்றார்; என் பிஎம்டபிள்யூ கார் இஎம்ஐ கட்டுவேன் என வாக்குறுதியும் அளித்தார். என் குழந்தைகளுக்கான உரிமை கிடைக்கும் வரை நான் போராடுவேன்,” எனவும் ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.

தற்போது, இருவரின் குற்றச்சாட்டு மறுப்பு தொடரும் நிலையில், மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version