புதுடில்லி: பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்கியதாக கிடைத்த தகவல்களை வைத்து, தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இந்தியா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (என்ஐஏ) அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, குல்காம், அனந்த்நாக், புல்வாமா மாவட்டங்களில் மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதேபோல், விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும் பீஹார் மாநிலத்தில் 8 இடங்களில், உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்களில் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று, சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தினர். சோதனை மற்றும் விசாரணை பல மணி நேரமாக நீடித்து வருகிறது.
