பீஜிங்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரிய சவாலாக உள்ளது” என்று வலியுறுத்தினார்.
மாநாட்டில் பேசிய அவர், “இந்தியாவுக்கு எஸ்சிஓ என்பது எஸ்–பாதுகாப்பு, சி–இணைப்பு, ஓ–வாய்ப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டது. ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில் பாதுகாப்பும், அமைதியும், நிலைத்தன்மையும் அவசியம். ஆனால் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன” என்றார்.
மேலும், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவுபடுத்திய மோடி, “பயங்கரவாதம் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, மொத்த மனிதகுலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை மிக முக்கியம். இதை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.
மாநாட்டிற்கு அழைத்துச் சிறப்பாக வரவேற்ற சீன அதிபருக்கு நன்றியும் தெரிவித்தார்.