துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், “நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, கட்சி பேதமின்றி தமிழக எம்பிக்கள் அனைவரும் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அவரது வலியுறுத்தல் தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.