தமிழ்நாடு நாளான ஜூலை 18 தமிழக வரலாற்றிலும், தமிழ்க் குடி நலனுக்காக நடந்த திருப்புமுனையாகவும் அமைந்த நாளாகும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
“1967 ஜூலை 18ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது. அதன் மூலம் இந்த மண்ணின் அரசியல் முகவரியில் முதல் வரியே மாற்றம் பெற்றது. ஆண்டாண்டு காலமாக நமது நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் இதுவாகும்.
அதுவரை ‘மெட்ராஸ் மாநிலம்’ என அழைக்கப்பட்ட இந்நிலம், முதல்வர் அண்ணாதுரை தலைமையில், சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு’ என பெயரிடப்பட்டது. ‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’ என மூன்று முறை அவர் முழங்கியபோது, மேசைகள் ஒலித்து, விண்ணைத் தொட்ட பெருமிதம் இன்றும் தமிழர்களின் மனதில் நன்கு நிலைத்துள்ளது,” என்று கூறியுள்ளார்.