தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தொழில்முனைவோர் தொடங்க விரும்பும் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆணவக் கொலை சம்பவங்கள் தொடர்பாக, தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல்வாதிகள் வலியுறுத்தி வரும் சூழலில், இந்த கூட்டத்தில் அந்த விடயமும் முக்கிய விவாதப் பொருளாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், எதிர்வரும் நாட்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு முக்கிய திசையை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.