சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. க்கு நெஞ்சுவலி ; மருத்துவமனையில் அனுமதி

போலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக குற்றச்சாட்டு வெளியிட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1996ஆம் ஆண்டு காவல் துறையில் எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்த சுந்தரேசன், உளவுத்துறை, சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் சேவை புரிந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.

2024 அக்டோபரில் போலீசாருக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது. அங்கு உயரதிகாரி உத்தரவின் பேரில் அவரது அரசு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் தாக்கும் வழக்கில் தன்னை டார்ச்சர் செய்ததாக சுந்தரேசன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

இதையடுத்து, சீருடை பணியாளர் ஒழுங்கு விதிகளை மீறி நடந்ததாக கூறி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜூலை 23ஆம் தேதி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர பிரிவில் அவரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version