ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், தெரிவித்ததாவது, தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய மானியம் திட்டத்தின் கீழ், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்கள் நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக வழங்கப்படுகின்றது. 01.11.2025-க்கு பிறகு பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகள் இந்த மானியத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இலவசமாக பெறலாம். அதேபோல், www.bcmbcmw.tn.gov.in இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.02.2026-க்குள், ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த திட்டம், தமிழ்நாட்டில் கிறித்தவர்களுக்கு மதப் பயண அனுபவத்திற்கான நிதி ஆதரவை நேரடியாக வழங்கும் முயற்சியாகும்.
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்கள் மானியம்
-
By sowmiarajan

- Categories: News
- Tags: Christian pilgrimagefaith tourismgovernment supportJerusalem travelsubsidy scheme
Related Content
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 05 december 2025 | Retro tamil
By
Digital Team
December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு - மரபை மீறும் மத்திய அரசு
By
Kavi
December 4, 2025
பாமக தலைவர் யார்? - உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
By
Kavi
December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை - உயர்நீதிமன்றம் சாடல்
By
Kavi
December 4, 2025