பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா – “இறைவனுக்கு நன்றி” எனத் தாயார் நெகிழ்ச்சி

ஆக்சியம்–4 விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் பயணித்த டிராகன் விண்கலம், சமீபத்தில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கியது.

இந்தத் தரையிறக்க நிகழ்வை, சுபான்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் லக்னோவிலுள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் நேரலையாக பார்த்தனர். மகனின் பாதுகாப்பான திரும்புவை பார்த்து, அவரது தாயார் ஆஷா சுக்லா உணர்ச்சிவசப்பட்டார்.

“என் மகன் பல நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இதற்கு இறைவனுக்கு மனமார்ந்த நன்றி. மகனின் வெற்றியை வெளியில் இருந்து பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்,” என்று கண்கள் கலங்கக் கூறினார் ஆஷா சுக்லா.

சுபான்ஷுவின் பாதுகாப்பான திரும்புதல், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பெரும் உற்சாகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர், இந்த வரலாற்றுப் பயணத்தின் முடிவில் பெருமிதம் அடைந்தனர்.

Exit mobile version