ரீல்ஸ் மோகம்.. கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில்வே இருப்பு பாதை அமைந்துள்ளது.

இந்நிலையில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் கீழ் காலனி என்ற பகுதி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் நடுவே சுமார் மாலை நேரம் கல்லூரி விட்டு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி இளைஞர்கள், இன்று மாலை ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுப்பது புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை செய்து வந்தனர்.

அதில் ஒரு மாணவர் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து போனில் மூழ்கினார்.மேலும் இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் அடிக்கடி இந்த தண்டவாளப் பகுதியில் எதிர்பாரதவிதமாக ரயில் மோதி பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆபத்தான முறையில்,

இதுபோன்று ரிலீஸ் எடுக்கும் இளைஞர்களுக்கு போலீசார் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version