பெங்களூர் அலைன்ஸ் பல்கலைக்கழகம் (Alliance University) சார்பில் தேசிய அளவில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட திட்டக் கண்காட்சியில், திருப்பூர் ‘தி ப்ரண்ட்லைன் அகாடமி’ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுப் பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.தேசிய அளவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட தனித்துவமான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்களின் மூன்று திட்டங்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுவர்களின் பாராட்டைப் பெற்றன.பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவன் மித்தேஷ் சமர்ப்பித்த அறிவியல் திட்டம் தேசிய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இம்மாணவனுக்கு ரூபாய் 5,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களான முகமது இனாஸ், எஸ். மனோஜ் குமார் மற்றும் எம். ரோஹித் ஆகியோரின் இரண்டு வெவ்வேறு அறிவியல் திட்டங்கள் ‘சிறந்த திட்ட விருதுகளை’ (Best Project Awards) தட்டிச் சென்றன. இந்தச் சாதனைக்குத் துணையாக இருந்த வழிகாட்டி ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் சீனிவாசன் ஆகியோரை பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது. தேசிய அளவில் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை: பள்ளியின் தாளாளர் சிவசாமி செயலாளர் சிவகாமி இயக்குனர் சக்திநந்தன் இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன்பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இத்தகைய வெற்றிகள் அமைந்திருப்பதாகப் பள்ளி நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

















