தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்று நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார். இதில் பங்கேற்ற ஜீன் ராஜன் என்ற மாணவி, மேடைக்கு வந்து ஆளுநரின் கையால் பட்டம் பெற வேண்டிய தருணத்தில், அதை மறுத்தார்.
ஆளுநர் அருகில் வந்து நிற்கும்படி அழைத்தும், அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். பின்னர், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் தனது பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஊடகங்களுக்கு பேசிய ஜீன் ராஜன், “ஆளுநர் தமிழ் மொழிக்கும், தமிழருக்கும் எதிராக செயல்படுவதால், அவரிடம் இருந்து பட்டம் பெற விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

















