“என்னை சிலர் டார்கெட் செய்கிறார்கள்” – வேதனை பகிர்ந்த நடிகை கயாடு லோஹர் !

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் தன்னை குறிவைத்து பரவிய வந்த வதந்திகள் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘டிராகன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அவர், தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் பெற்றுவரும் வேளையில், சமூக வலைதளங்களில் வெளிவந்த சில கருத்துகள் அவரை உலுக்கியுள்ளன.

சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து அவர் பேசினார் என்ற வதந்தி பரவியிருந்தது. இதைக்கூட சமாளிக்குமுன், நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளில் பங்கேற்க அவர் லட்சக்கணக்கில் கட்டணம் கேட்டார் என்கிற மற்றொரு தகவலும் இணையத்தில் பரவியது. இந்த எல்லாவற்றும் அசல் தகவல்களல்ல என்று நடிகை தெரிவித்தார்.

ஒரு யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், இத்தகைய கருத்துகள் தன்னை மிகுந்த அளவில் பாதித்துள்ளதாக கயாடு லோஹர் கூறினார். “என்னைப் பற்றி இவ்வளவு பொய்யான தகவல்கள் கிளப்பப்படும் என்று நினைத்ததே இல்லை. இதைப் பற்றி யோசிக்கும்போது கூட உறக்கம் வரவில்லை,” என அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

மேலும், “நான் யாரைப் பற்றியும் இப்படி பேசக்கூடிய நபரே இல்லை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. நான் என் கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்போது சிலர் ஏன் என்னை குறிப்பாக இலக்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை,” என்றார்.

திரையுலகத்தில் வதந்திகள் ஒரு பகுதியாக இருந்தாலும், இது தனது மனநிலையை பாதித்துவிட்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version