ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கிய வீராங்கனையாக திகழும் ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாது சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளார். அவரது திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஜோடி கடந்த சில வாரங்களாகத் திறந்தவெளியில் தங்கள் உறவை பகிர்ந்து வந்தனர். மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள ஸ்மிருதி குடும்ப பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, திருமணத்துக்கு முந்தைய இரவு அவரது தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குடும்பத்தின் முடிவினால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

பலாஷ் முச்சல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானாலும், பின்னர் அவரது சகோதரி வெளியிட்ட செய்தி அனைத்தையும் தெளிவுபடுத்தியது. ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலை காரணமாகவே திருமணம் நிறுத்தப்பட்டது என்றும், தனியுரிமையை மதிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை
இந்நிலையில், மேரி டி’கோஸ்டா என்ற பெண்மணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சாட் ஸ்க்ரீன்ஷாட்கள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அதிகாலை 5 மணிக்கு மும்பையின் வெர்சோவா கடற்கரையில் சந்திக்கபலாஷ் அழைத்ததாக அந்த பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்மிருதியுடன் உள்ள உறவைப் பற்றி மேரி கேட்ட கேள்விக்கு பலாஷ் பதிலளிக்காததும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஸ்க்ரீன்ஷாட்களின் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் கூட, இவை வேகமாக வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மிருதியின் சமூக ஊடக செயல்பாடும் சந்தேகத்தை அதிகரிக்கிறது திருமணத்தைச் சுற்றியிருந்த அனைத்து பதிவுகளையும் ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், திருமண அறிவிப்பு வீடியோவை பகிர்ந்திருந்த ஜெமிமா ரொட்ரிக்ஸ் மற்றும் ஷ்ரேயங்கா உள்ளிட்ட சக வீராங்கனைகளும் அதை அகற்றியுள்ளனர்.

இதனால் உண்மையில் திருமணம் உடல்நிலை காரணமாகதானா நிறுத்தப்பட்டதா ? அல்லது வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளனவா? என்ற கேள்விகள் வலைதளங்களில் வலுவாக எழுந்து வருகின்றன.

Exit mobile version