கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தகவலின்படி, டயானி விமான நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு, பிரபலமான சுற்றுலாத் தலமான மசாய் மாரா தேசிய சரணாலயத்தை நோக்கி சென்ற சிறிய ரக விமானம், 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் திடீரென சிக்கி விபத்துக்குள்ளானது.
விபத்து நடைபெற்ற இடம் மலைப்பகுதியாக இருந்ததால், மீட்பு பணிகள் சிரமத்துடன் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 12 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

















