வங்கி FD-ஐ விட அதிக DIVIDEND வழங்கிய ஸ்மால் கேப் பங்குகள் – உங்கள் வாட்ச் லிஸ்டில் அவசியம் சேர்க்க வேண்டியவை!

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களிடையே ஸ்மால் கேப் பங்குகள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் மல்டிபேகர் லாபம் மற்றும் உயர் டிவிடெண்ட் தரவல்ல இவை போன்ற பங்குகளை விரும்பி தேர்வு செய்கிறார்கள்.

அண்மையில் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நடத்திய ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களில் பல ஸ்மால் கேப் பங்குகள் வங்கி நிலையான வைப்புத் தொகை (FD) மற்றும் அரசு சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாக, 4% முதல் 8.5% வரை டிவிடெண்ட் வருமானம் வழங்கியுள்ளன.

அதிக டிவிடெண்ட் கொடுத்த முன்னணி ஸ்மால் கேப் பங்குகள் :

MSTC Ltd – கடந்த ஒரு வருடத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.45.5 டிவிடெண்ட் வழங்கி, சுமார் 8% டிவிடெண்ட் யீல்டை பெற்றுள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) – ரூ.55 டிவிடெண்ட் வழங்கி, 7% டிவிடெண்ட் யீல்டை பதிவு செய்துள்ளது.

PTC India Ltd – ரூ.12.8 டிவிடெண்ட் வழங்கி, 7% வருமானம் அளித்துள்ளது.

Castrol India மற்றும் Allcargo Logistics – தலா 6% டிவிடெண்ட் வழங்கியுள்ளன.

Nirlon Ltd – ரூ.26, 5% டிவிடெண்ட் யீல்டுடன்.

Gujarat Pipavav Port – ரூ.7.7, 5% டிவிடெண்ட்.

Indraprastha Gas Ltd – ரூ.10.5, 5% வருமானம்.

மற்ற குறிப்பிடத்தக்க பங்குகள் :

DB Corp, RITES, Balmer Lawrie, La Opala RG, HeidelbergCement India மற்றும் Pfizer ஆகியவை 4% வரை டிவிடெண்ட் வழங்கியுள்ளன.

இதில் Pfizer, ஒரு பங்கு மீது ரூ.200 வரை டிவிடெண்ட் வழங்கி முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிபுணர்கள் கூறுவது :

இத்தகைய பங்குகள், பாதுகாப்பான மற்றும் சீரான வருமானத்தை தேடும் முதலீட்டாளர்களுக்காக சிறந்த தேர்வாக இருக்கலாம். FD-யை விட அதிக வருமானத்தை வழங்கும் இவ்வகை பங்குகளை உங்கள் வாட்ச் லிஸ்டில் இன்றே சேர்க்கலாம்.

Exit mobile version