பறக்கும் வாகனத்தை உருவாக்கும் ஸ்லோவாக்கிய நிறுவனம் ! இத்தனை சிறப்புகளா ?

உலகம் தொழில்நுட்பத்தில் நிமிடத்திற்கு ஒரு முன்னேற்றம் கண்டுவரும் இக்காலத்தில், ஸ்லோவாக்கியாவை தலைமையிடமாகக் கொண்ட கிளைன் விஷன் (Klein Vision) நிறுவனம் உருவாக்கி வரும் பறக்கும் கார், மனித கற்பனைக்கு ஒரு புதிய உயரம் கொடுத்து வருகிறது.

2026-ல் வணிக உற்பத்திக்கு தயாராகும் இந்த ஏர்கார், கார் முதல் விமானம் ஆகும் மாற்றத்தை வெறும் 90 வினாடிகளில் செயலில் கொண்டு வர முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சம்.

முக்கிய தகவல்கள்:

விலை: $800,000 முதல் $1 மில்லியன் வரை

வேகம்: வானில் 155 mph | சாலையில் 124 mph

பறக்கும் உயரம்: 10,000 அடி

பயண தூரம்: வானில் 620 மைல்கள் | சாலையில் 497 மைல்கள்

இருப்பிடம்: 2 பயணிகள்

இக்கார், 2022-ல் பறக்கும் விமானமாக அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெற்றுள்ளது. இதுவரை 170 பறக்கும் மணிநேரங்கள், 500-க்கும் மேற்பட்ட டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த ஏர்கார், மடிக்கக்கூடிய இறக்கைகள் மற்றும் வால் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக பாராசூட் பாதுகாப்பு அமைப்பும் இதில் இடம் பெற்றுள்ளது.

கிளைன் விஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டெபன் கிளைன், “பறக்கும் ஆசையை சாதாரண மக்களின் கைகளில் கொண்டு வருவது என் வாழ்நாள் கனவு,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஏர்கார் திட்டம், போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் முயற்சியாக கருதப்படுகிறது. இதன் போலியான திட்டம், விரைவில் துபாயிலும் அறிமுகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version