துபாய் சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் லைட் காம்பட் எயர்கிராப்ட் (LCA Tejas) இன்று நடைபெற்ற சாகசப் பறக்கும் நிகழ்ச்சியின் போது விபத்துக்குள்ளானது.
வானில் சாகசப் பயிற்சிகள் செய்து கொண்டிருந்த தேஜஸ் விமானம், திடீரென உயரம் இழந்து தரைக்கு நேராக விழுந்து சில நொடிகளில் வெடித்து சிதறியதாக தெரிவிக்கின்றன. விபத்துக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் விமானத்தில் இருந்த விமானி இஜெக்ட் செய்யவில்லை என்பதும் முதல்நிலை தகவல்களில் கூறப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை, உயிர் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
2015 ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் செயல்பட்டு வரும் தேஜஸ் விமானத்தில் இது இரண்டாவது பெரிய விபத்து என பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















