சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு – தீ ஆணையத் தலைவராக நியமனம்

சென்னை: சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வரும் சங்கர் ஜிவால், இன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, அவரை தீ ஆணையத் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பதவியேற்ற சங்கர் ஜிவால், நீண்ட கால காவல் சேவையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி பதக்கங்களைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடன், தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் டிஜிபி சைலேஷ் குமார் யாதவும் இன்று ஓய்வு பெறுகிறார். இருவருக்குமான பிரிவு உபசார விழா விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சங்கர் ஜிவாலின் புதிய நியமன உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ளார்.

Exit mobile version